எஸ். செந்தில்குமார்
உடைந்த கண்ணாடியில்
முகம் பார்க்க பழகி கொள்
அதில்
உன் தலையில் இருக்கும் பூக்கள் தெரியாமல் போகலாம்
ஆகாயம் தெரிய கூடும்
ஆகாயத்தில் பறக்கின்ற பறவைகளும் தெரியலாம் ஒரு வேளை
உடைந்த கண்ணாடியில் முகம் பார்கின்ற
வருத்தத்தை அறிந்த பறவைகளில் ஒன்று
கண்ணாடியின் அருகாமையில் முகம் தெரியப்
பறந்து கடக்கலாம் உன்னை.
வருத்தமற்ற முகத்தை
உடைந்த கண்ணாடி துண்டில்
அப்பறவை வேறெங்கேனும் காணும்
அப்போது
ஜன்னலின் வழியே
பறவைகள் ஒவ்வொன்றும் விட்டுச் செல்லும்
ஆகாயத்தைப் பார்த்து கொண்டிருப்பாய்.
Tuesday, February 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)

very nice!!!!!!!!!
ReplyDelete